ஜாக்கிரதை: வாசலிற்கு வந்த கொரோனா
- GrandMaa's House
- May 15, 2020
- 1 min read
Updated: May 20, 2020

சர்வதேச அளவில் பரவும் கொரோனா, நம் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிவருகின்றது.தமிழ் நாட்டின் ஒரே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவாட்டம் தற்போது சிவப்பு மண்டலம் ஆகியது.
வீட்டில் இருக! உயிரோடு இருக! - கொரோனா
சராசரியாக 15 முதல் 40 வயது மக்களுக்கு அடாப்டிவ் வகை நோயெதிர்ப்பு சக்தி இருக்கும். சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு இன்னேட் மற்றும் பாஸிவ் வகை நோயெதிர்ப்பு சக்தி இருக்கும். அடாப்டிவ் வகை நோயெதிர்ப்பு சக்தி கொரோனா போன்ற வைரஸ்கலை எதிர்க்கும் சக்தியுடையது, மற்றவைகளுக்கு அத்திறன் கிடையாது.

எனவே கொரோனா வைரஸ் குழந்தைகள் மற்றும் முதியவர்களை மிகுந்தளவில் பாதிக்கும். இதை தவிர்க்க Grandmaa's House- குழுவுடன் நாம் ஒன்றிணைந்து கொரோனா பரவலை தடுக்க சிறிய பழக்கவழக்கங்களை மாற்றி பின்பற்றலாம்:
1. உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். சோப்பு அல்லது ஆல்கஹால் சார்ந்த கை தடவலைப் பயன்படுத்துங்கள்.
2. இருமல் மற்றும் தும்மல் உள்ள எவரிடமிருந்தும் பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும்.
3. உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடாதீர்கள்.
4. நீங்கள் இரும்பும் போதும் அல்லது தும்மும் போதும் உங்கள் கை அல்லது கைக்குட்டையால் மூக்கு மற்றும் வாயை மூடவேண்டும்.
5. உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்.
6. உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், மருத்துவ சிகிச்சைக்கு அவசர எண்ணை அழைக்கவும்.
7. உங்கள் உள்ளூர் சுகாதார அதிகாரியின் வழிமுறைகளைப் பின்பற்றுக.
8. குழந்தைகள் மற்றும் முடியவர்களை வீட்டைவிட்டு வெளியச்செல்ல அனுமதிக்காதீர்கள்.
9. அவசர சூழ்நிலைகளில் வெளியே செல்லும் கட்டாயம் ஏற்பட்டால் முகக்கவசம் மற்றும் கையுறையை அணிந்து செல்லவும்.
சமீப செய்திகள் மற்றும் சந்தேகங்களை பற்றி அறிய, உலக சுகாதார நிறுவனத்தின் வலைத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க


Comments