பாட்டி வீட்டின்
வணக்கங்கள்
புத்திசாலித்தனமாக விளையாட, படிக்க, வளர………. குழந்தைகள் தங்களது பாட்டியுடன் இருப்பதை போன்ற உணர்வு, மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம்.

எங்களைப் பற்றி
-
பாட்டி தனது பேரக்குழந்தைகளை எவ்வளவு அன்போடும், அக்கறையோடும் கவனித்துக் கொள்வார்களோ , அதேபோன்ற அரவணைப்புடன் கூடிய ஒரு மையம் ஆகும்.
-
குழந்தைகளுக்கு தங்களது வீட்டில் இருப்பதைப் போன்ற மகிழ்ச்சியும், குதூகலமும், ஆனந்தமும் கிடைக்க வகை செய்வது.
-
விளையாட்டுடன் கூடிய கல்வியை போதிப்பது. தாங்கள் படிக்கின்றோம் என்ற எண்ணம் இல்லாமலேயே கற்றுக்கொள்வது மற்றும் கற்றவற்றை மறக்காமல் ஆழ்மனதில் பதியவைப்பது …
-
நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்வது. நாளை, செல்லும் பள்ளிகளில் நற்குணங்களை பிரதிபலிக்க செய்வது…..
-
அவர்களின் நடவடிக்கைகளை கொண்டு, இது பாட்டி வீட்டில் படித்த, வளர்ந்த குழந்தை என்ற பெயர் எடுப்பது.
எங்கள் திட்டங்கள்
Learning through play
மாண்டிசோரி கற்பித்தல் முறை
மாண்டிசோரி முறை மூலம் மாணவர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் பெறுவர். குழந்தைகளின் ஆழ்மனதை தொடும் படியான, உற்சாகமான விளையாட்டு உடன் கூடிய கல்வி பயிற்றுவிக்கப்படும். எங்கள் பாட்டி வீட்டிற்கு விஜயம் செய்தால் கூடுதல் தகவல்களை பெறலாம்.


Stop Mobile and TV Addiction
கைபேசி மற்றும் தொலைக்காட்சி மோகம் தீர
-
கைபேசியை கொடுத்தால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளை அதிலிருந்து மீட்பதற்கு வழிமுறைகள்
-
கைபேசி மற்றும் தொலைக்காட்சியை எந்த மாதிரி விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு தரும் கல்வி.
Outdoor Play
விளையாட்டு முறை கல்வி
உங்கள் பிள்ளைக்கு என்ன தேவை என்பதற்கேற்ப, எங்கள் ஒவ்வொரு திட்டமும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆதரவையும் கருவிகளையும் வழங்கும்.
வெளிப்புற விளையாட்டு குழந்தைகளுக்கு சரியான பொருத்தமாக இருக்கும்.


Traditional Games
பாட்டிகளின் பாரம்பரிய விளையாட்டுக்கள்
பாரம்பரிய விளையாட்டு மூலம் நம்மிடமிருந்து மறைந்த விளையாட்டுக்களை திரும்பவும் கொண்டு வருதல்.
Story telling
பாட்டியின் நீதிநெறி கதைகள்
நீதிநெறி கதைகள் மூலம் அவர்களுக்கு நமது ப ாரம்பரியத்தை கற்றுக் கொடுத்தல்


Singing and Dancing
திறனை ஊக்குவிக்கும் போட்டிகள்
ஆரோக்கியமான போட்டிகள் மூலம் ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்தை வெளிக்கொணர்வது.
Prayer and Yoga
உடல் மற்றும் மனம் மேம்படுத்தும் பயிற்சிகள்
நாங்கள் வழங்கும் யோகா, பிரார்த்தனை போன்ற பயிற்சிகள் குழந்தைகளின் உடல் மற்றும் மன நிலையை நிலைநிறுத்தும்.

Quadrilingual Mediums
பல்மொழி பேசும் திறனை வளர்ப்பது.
மூவகை மொழிகளில் திறன்வாய்த்த ஆசிரியர்களை கொண்ட நாங்கள் தமிழ், ஆங்கிலம், மற்றும் ஹிந்தி பேசவும், எழுதவும் பயிற்சி வழங்குகின்றோம்.

எங்கள் ஆசிரியைகளைப் பற்றி
அக்கறை மற்றும் அர்ப்பணிப்புடன்
முப்படை தளபதிகள் போன்று இந்த மூன்று திறமைசாலிகள் பாட்டி வீட்டின் சொத்துக்கள். இங்கு வரும் குழந்தைகள் ஒரு உன்னதமான, பெயர் சொல்லும் குழந்தைகளாக வருவார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் , மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது

தமிழ்ச்செல்வி கௌதமன்
ஆசிரியர்
குழந்தை வளர்ப்பில் மிகுந்த ஈடுபாடு அக்கறை கொண்டிருப்பவர். தனது வாழ்க்கையையே சத்திய சோதனையாக செய்த மகாத்மா காந்தியடிகள் போன்று, இவர், தன் குழந்தைகளுக்கு அரசாங்கப் பள்ளியில் கல்வி, வீட்டில் தயாரித்த தின்பண்டங்கள் மட்டும் சாப்பிடுவது, வெளியில் தின்பண்டங்கள் வாங்குவதை அறவே தவிர்த்தல், பாட்டி கைவைத்தியம் என தனது குடும்பத்திலேயே ஆரம்பித்து, கடைபிடித்து கொண்டிருக்கும் ஒரு லட்சிய தாய். இந்த பாட்டி வீடு உருவாக காரண கர்த்தா என்றால் அது மிகையாகாது.
எண்ணம் போல் வாக்கும், வாக்கு போல செயலும் இருக்க வேண்டும் என வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு லட்சிய பெண்மணி.

தாரணி பத்ரிநாத்
ஆசிரியர்
இவரின் குழந்தை வளர்ப்பு அலாதியானது. இவரது அன்பிற்கும், இனிய சொல்லுக்கும் அடிமை ஆகாத ஜீவர்கள் இருக்க முடியாது. தன் குழந்தைகளைப் போன்று மற்ற குழந்தைகளையும் அன்பால் கட்டிப் போட தெரிந்த ஒரு இல்லத்தரசி.
குழந்தைகளோடு சேர்ந்து, தானும் குழந்தையாய் மாறிவிடும் கலையை இறைவன் இவருக்கு அளித்த வரம் என்றால் அது மிகையாகாது.
இவருடன் பேசும் எந்த நபரும், குழந்தையும் இவருக்கு ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். அந்த அளவு இன்சொல், நகைச்சுவை மூலம் கட்டிப்போடும் திறமை கொண்டவர்.
தமிழ், ஆங்கிலம் எழுதப்படிக்க தெரிந்த B.Ed பட்டதாரி ஆவார்.நன்றாக பயிற்றுவிக்கவும் தெரிந்தவர்.

சாந்தி செந்தில்குமார்
ஆசிரியர்
இவர் பல வருடங்களாக குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக் கொண்டிருப்பவர். மும்பை, புதுடெல்லியில் பத்து வருடங்களாக இருந்தவர். தில்லியில் ஐந்து வருடமும், ஓசூரில் ஐந்து வருடமும் டியூஷன் அனுபவம் பெற்றவர்.
குழந்தைகளின் நடவடிக்கையில் இருந்து அவர்களின் ஜாதகத்தையும், எதிர்காலத்தையும் கணிக்க கூடியவர். இவரை யாரும் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது. இவரைக் கண்டால் குழந்தைகளுக்கு பயம் கலந்த மரியாதை தானாகவே வரும்.
பெற்றோர்கள் சொல்லி கேட்காத குழந்தைகள், இவருக்கு கட்டுப்படும். இது டியூசனுக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுத்த வாக்குமூலம். தமிழ் , ஹிந்தி , ஆங்கிலம் எழுத , படிக்க கற்றுக்கொடுக்கும் திறமை கொண்டவர். இவர் பாட்டி வீட்டின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆவார்.
பாரத நாடு பழம்பெரும் நாடு -
நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்ற தீர்
-பாரதியார்

பாரத நாடு பழம்பெரும் நாடு -
நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்
-பாரதியார்
எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள்! இலட்சியத்தை அடையும்வரை நில்லாது செல்லுங்கள்
-சுவாமி விவேகானந்தர்

எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள்! இலட்சியத்தை அடையும்வரை நில்லாது செல்லுங்கள்
-சுவாமி விவேகானந்தர்
எங்களை தொடர்புகொள்ள
1/537-A, Adhiyamaan street,MGR Nagar,
Mookandapalli,Hosur - 635126,
Tamil Nadu




